Al-Mass Association நிறுவனம் அன்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கல்குடா பிரதேசத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது.
கல்குடா பிறை kalkudah Pirai
Friday, January 2, 2015
Sunday, December 14, 2014
Thursday, August 21, 2014
Saturday, August 16, 2014
கடைசி சொட்டு
நேரம்…
உயிர் உடலிருந்து
உறுகப்பட்டு
தொண்டைக் குழிக்குள்
ஊசலாடும் நேரம்…
‚‚‚
இன்னும் சில நிமிடத்தில்
ஊர் பல்கலைக்கழகம்
உனக்கு பட்டம் தரும்
“மையத்து” என்று…
‚‚‚
நிஜவாழ்க்கை புரியும்
மறுமையின்
காட்சிகள்
ஆரம்பமாகும்…
‚‚‚
உறவுகள்
ஒப்பாரி வைப்பார்கள்…
மல்லாந்து
படுக்கும் நீ
படைத்த ரப்பிடம்
ஒப்பாரி வைத்து(க்)
கொண்டிருப்பாய்…
‚‚‚
மரணம்
மயக்கமல்ல…
முடிவான
தூக்கமல்ல…
முடிவில்லா
இன்னுமொரு
வாழ்வின் துவக்கம்…
‚‚‚
ஏற்றுக்கொள்வாயா…
‚‚‚
உலக வாழ்க்கையில்
ரப்பாக நீ
யாரை ஏற்றிருந்தாய்…
வயலும் கடையுமா…
அல்லது-
பணம் பட்டம் பதவிகளா…
எல்லாம்-இந்த
கடைசிச்சொட்டு
நேரத்தில் புரியும்…
‚‚‚
“கலிமா” உனது
வாழ்க்கை என்றால்
மலக்குகள்-
வாழ்த்துக்கூறுவார்கள்…
ரம்மியமான சுபனத்தை
ரசித்தவனாக-
உயிர் பிரிவாய்…
‚‚‚
இல்லை என்றால்…
இன்னுமொரு வினாடி-
கேட்பாய்…
கதறுவாய்…
தப்பிப் பிழைத்து
தரையில்-
மீண்டும் வாழ்வதற்கு…
‚‚‚
விடைபெறும்
நேரத்தில்
விமோசனம்
இருக்காது…
‚‚‚
சந்தூக்கில் ஏற்றப்பட்டு
கப்ர் குழிக்குள்-
சென்ற பின்பு
அடுத்தது நிகழும்…
‚‚‚
சல்மான் வஹாப்
(வாழைச்சேனை வஹாப்)
Monday, August 11, 2014
10.08.2014இல் இடம்பெற்ற கவிஞரும், ஆசிரிய ஆலோசகருமான சல்மான் வஹாபின் CD வெளியீட்டு விழா. கௌரவ அமைச்சர் அல்-ஹாஜ், அல்-ஹாபிழ் - நஸீர் அஹமட் அவர்கள் - (விவசாயம் கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் மற்றும் மீன்படி, சுற்றுழாத்துறை அபிவிருத்தி அமைச்சு) கவிஞரிடமிருந்து (CD) இறுவட்டினை பெற்றுக்கொள்கின்றார்கள்.
Saturday, August 9, 2014
Saturday, July 26, 2014
“பித்ரா” வெள்ளம்
“பித்ரா” வெள்ளம்
மழை வெள்ளம்
வரண்டு போன
எனது ஊரில்
“பித்ரா” வெள்ளம்
கரைபுறழ்கிறது
..................
ஒவ்வொருவரும்
வீட்டுக்காவலில்
வைக்கப்பட்டுள்ளார்கள்
“பித்ரா” காரர்களின்
பித்னாக்களில்
இருந்து
தப்புவதற்காக
..................
பித்ராக்களுக்கும்
ஸக்காத்துக்கும்
பயந்து
ஊரின் பல ஹாஜிகளும்
ஒளித்து விட்டார்கள்
உம்ரா எனும்
புனித யாத்திரைக்குள்
...................
முதலாளிகள்
காசில்லா ஜீவன்களை
காலுக்குள்
அடைத்து வைத்து
சில்லரைகளால்
அப்பம் சுடுகின்றார்கள்…
...................
பாவம்…
ஒரு பொழுதை
நோன்புடன் கழித்த
மிஸ்கீன்களுக்கு
மிட்டாசு வாங்குவதற்கு
ஸதக்கா நோட்டுக்கள்…
...................
ஏழைகள் ஊரில்
இல்லை என்றிருந்தேன்
பிச்சைக்காரர்களின்
கூட்டத்தை
பித்ராவில்
கண்டு
ஆச்சரியமடைந்தேன்.
...................
வசதியுள்ளோரே…
ஏழைகள் வீதிகளுக்கு
வருமுன் அவர்கள்
வீடுகளுக்கு
செல்லுங்கள்…
சமூகத்தின்
அவலம்
சந்திகளுக்கு
வருவதை
தடுத்து நிறுத்துங்கள்…
2015-பித்ராவில்
ஏனும்…
சல்மான் வஹாப்
Subscribe to:
Comments (Atom)
.jpg)
